வெளிநாடு சென்றிந்த 7 அமைச்சர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு பணிப்புரை!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர்கள் 7 பேரை உடனடியாக நாடளாவிய ரீதியில் அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (20.03) நடைபெறவுள்ள நிலையில், மேற்படி அமைச்சர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஏழு அமைச்சர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரேரணை மீதான விவாதத்தின் போது அனைத்து அமைச்சர்களையும் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இறுதி வாக்கெடுப்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply