சீனாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி

சீனாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயத் தொகை இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதியின் பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply