கொவிட் 19 தொற்றின் காரணமாக நீண்ட முடக்க நிலைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 746,085 பயணிகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 409,496 வருகைகள் மற்றும் 336,589 புறப்படுகைகளும் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கொவிட் 19 தொற்றுக்கு முன்னர் பயணிகளின் வருடாந்த போக்குவரத்து 10 மில்லியனுக்கும் அதிகமாவிருந்த நிலையில், விமான நிலையத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கையை 15 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார.