ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இன்றி வரவு செலவுத் திட்டம் சமர்பித்த அரசாங்கம் என்ற சாதனையை படைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் நேற்று (18/11) தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ”அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது 95 ரூபாவாக இருந்த நாட்டரிசி இன்று 150 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாவாக இருந்த சம்பா அரிசி இன்று 190 ரூபாவிற்கும் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாவிற்கும் குறைவாக இருந்த சீனியும் பருப்பும் 200 ரூபாவிற்கு அதிகம் விற்கப்படுகிறது.
மஞ்சள் 5000 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறி, பழங்கள், தானிய வகைகள் என அனைத்தினது விலை அதிகரித்துள்ளது. 1400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கேஸ் இன்று 2800 ரூபா வரை உயர்ந்துள்ளது. 100 ரூபாவிற்கு இருந்த பெற்றோல் 150 ரூபாவை தாண்டியுள்ளது” என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆகவே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்பதாகும். ஆனால் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை அள்ளிக் குவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.