யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் அதிகாரப்பிரிவுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை இன்று (19/11) பிறப்பித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (18/11) மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான பொது சுடர் ஏற்றும் பீடம் இனந்தெரியாதோரால் இடித்து உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த அட்டூழியச் செயற்பாடுகளுக்கு அதன் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.