ஆட்சி முறைமையில் மாற்றத்தை கோரும் கத்தோலிக்க ஆயர் பேரவை

இலங்கை ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. 

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு கடுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை, மக்களின் இன்னல்களை போக்க ஆட்சி முறைமையில் பெரும் மாற்றத்தை வலியுறுத்தியுள்ளது. 

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கடமையாற்ற வேண்டியது அனைத்து மக்களினதும் பொறுப்பாகும் எனவும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 275 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 5 வருடங்கள் நிறைவு பெற்றுவதை நினைவுக்கூர்ந்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை, அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

கத்தோலிக்க ஆயர் பேரவையினால வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கத்தோலிக்க ஆயர் பேரவையின் இலங்கை தலைவர் ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேரா மற்றும் பொதுச் செயலாளர் ஆயர் ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். 

Social Share

Leave a Reply