கொழும்பு – கறுவா தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள மக்டொனால்ட்சில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் இன்று (20/11) காலை ஏற்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டடத்தில் அமைந்துள்ள மக்டொனால்ட்சில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸாரின் முதற் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும் தீ சம்பவத்தினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்
.