எதிர்வரும் 15ம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15ம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அசோக பிரியந்த ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.