சிறைச்சாலைகளுக்குள் 50 கைதிகள் உயிரிழப்பு..!  

இந்த வருடத்தில் மாத்திரம் சிறைச்சாலைகளில் உள்ள 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலை, சுகவீனம் மற்றும் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்படும் மோதலினால் இவ்வறான உயிரிழப்புக்கள்  பதிவாகுவதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்திலும் சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளுள் 209 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 6 பெண் கைதிகளும், 03 வௌிநாட்டு கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply