‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ – ஜீவன் MP

கொரனா தொற்று நிலைமையின் காரணமாக தம்மால் நினைத்த அளவுக்கு வேலை பார்க்க முடியவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று (20/11) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தனது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் பணிகளில் மிக முக்கியமாக, கொவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நாளொன்றுக்கு 175 தொற்றாளர்கள் பதிவாகி வந்தமையின் காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்கு தொண்டமான் கலாசார நிலையம் என்பன தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்களாக மக்களுக்காக மாற்றப்பட்டு அதனூடாக சேவைகள் வழங்கப்பட்டன.

இதனால் நாள் ஒன்றுக்கு தொற்றாளர் எண்ணிக்கையை 35 ஆக குறைக்க முடிந்தது என்றும் இந்த வேலை திட்ட பணிகளுக்காகவே தமது அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த பாரியளவு நிதி செலவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மூன்று முக்கியமான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அந்த வகையில் கல்வி, சுகாதாரம், விளையாட்டுத்துறை என்பவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய மலையகத்தில் வீடமைப்பு மற்றும் காணி உரிமை நிச்சயமாக பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்த ஜீவன், மலையகத்தில் கட்டாயம் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மட்டுமே அமைத்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது' - ஜீவன் MP

Social Share

Leave a Reply