தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகை அதிகரிப்பு  

தேர்தலுக்கான பிணை வைப்புத்தொகையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகை 2.6 மில்லியன் வரையும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 3.1 மில்லியன் வரையும் அதிகரிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகையை 11,000 ரூபா வரையும், சுயேட்சை குழுவின் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்பு தொகையை 16,000 ரூபா வரையும் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகையை 6,000 ரூபா வரையும் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகையை 11,000 ரூபா வரையும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply