கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அடையாளம் தெரியாத “Anonymous EEE” என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இந்த செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவனே தன்னை மேற்கோள்காட்டி, அமைச்சின் இணையத்தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக
சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இணையதளத்தை ஊடுருவியமைக்கு அந்த மாணவன் மன்னிப்பு கோரியிருந்நதுடன் கல்வி அமைச்சின்
உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை சரிபார்க்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
“இலங்கைப் பிரஜை என்ற வகையில் நாட்டின் பாதுகாப்பிற்காக இதனை அறியப்படுத்துகிறேன்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்து.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இணைய சேவை வழங்குநர்களிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி திடீர் பதிலளித்தல் ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்று கல்வியமைச்சுக்கு இன்று(10) கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கல்வி அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்தும் செயலிழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.