குருநாகல்-பொல்கஹவெலயில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேர் காயமடைந்துள்ளனர்.
கல்வெல்ல பகுதியில் இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் வீழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் தாய், தந்தை, பாட்டி மற்றும் 04 குழந்தைகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.