சுதந்திர கட்சி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருதுந்தது. 

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் நேற்று(18) கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்போது, கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply