பெருந்தோட்ட முதலாளித்துவ சம்மேளத்திற்கு எதிராக போராட்டம் 

முதலாளித்துவ சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, புறக்கோட்டையில் இன்று (19) இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த வாரம் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலில் முதலாளித்துவ சம்மேளனம் பங்கேற்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்ட துறையில் இரத்தம் மற்றும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Social Share

Leave a Reply