எதிர்வரும் பண்டிகை காலங்களில் பேக்கரி உணவு உற்பத்தியில் பாரியளவு சிக்கல் நிலை ஏற்படுமென பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் N.K ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக பேக்கரி உணவுப் பொருட்களை தயாரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோதுமை மா உற்பத்தியாளர் சங்கத்தினரின் மா உற்பத்தியானது, நூற்றுக்கு 25 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இதனால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் எதிர்வரும் பண்டிகை காலங்களின்போது பேக்கரி உணவு உற்பத்தியில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
