இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்  

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில் சுமார் 70 வீதமானோர் வீடுகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 15 வீதமானோர் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும், ஏனையோர் கட்டுமானத்துறையிலும், ஏனைய துறைகளிலும் பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், குறித்த வலயத்திலிருந்த 150,000 அதிகமானோர் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். 

குறித்த வலயத்திலிருந்த இலங்கையர்களும் புதிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்ற நிலையில், எவரேனும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தால் தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply