273 பேரின் இறுதி ஆராதனை..! 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன்(21.04) ஐந்தாம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம் 21ம் திகதியன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட 08 இடங்களில் 10 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. 

இத்தகைய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 273 பேர் உயிரிழந்ததுடன், 500கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுள் சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டிய தேவாலயம் வரையிலான ஊர்வலம் நேற்று(20.04) நள்ளிரவு ஆரம்பமாகியது. 

தாக்குதலில் உயிர் நீத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(20.04) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது.

நினைவேந்தலை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த ஊர்வலமானது, கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளை சந்தி ஹேகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கி பயணிக்கவுள்ளது.

Social Share

Leave a Reply