20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் கொழும்பில் நாளை முதல்

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் நாளை கொழும்பில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட தொற்றுயிலாளர் வைத்தியகலாநிதி டினுக குருகே தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்த வயது பிரிவினருக்கு ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல சுகாதாரதுறைக்கு அறிவித்தல் வழங்கியிருந்தார். நேற்று முன் தினம் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் கொழும்பில் 6 நிலையங்களில் குறித்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் கொழும்பில் நாளை முதல்

Social Share

Leave a Reply