தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று(29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 02ம் திகதி நடைபெற்ற போட்டி பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் மே மாதம் 9ம் திகதி வரை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது.