மெக்சிக்கோவில் பல உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி லா பாஸிலிருந்து மெக்சிகோ நகருக்கு தெற்கே உள்ள சால்மா சரணாலயத்திற்கு பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மேலும் 32 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply