வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடமிருந்து கைப்பேசி ஒன்றும் Handsfree ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றிரவு (21/11) கடமையிலிருந்த அதிகாரிகளினால் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைபேசி மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்
சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.