நேற்று(22/11) நடைபெற்ற வரவு செலவு திட்டத்துக்கான வாக்களிப்பில், அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், வாக்களித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதாக முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஷரப், இஸாக் ரஹ்மான்,அலி சப்ரி ரஹீம் ஆகியோர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்
மூவரையும் கடசியிலிருந்து இடை நிறுத்துவது எனவும், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது எனவும் ஏகமனதாக கட்சியின் உயர்பீடம் முடிவுசெய்துள்ளது.