யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்
நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15) நடைபெற்றது.
முதலில் பொதுச்சுடர் ஏற்றி நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித்துறை முகத்திலிருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் பயணித்த போது கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 36 பேர் நடுக்கடலில்
படுகொலை செய்யப்பட்டனர்.