ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக, வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் வேலை திட்டத்தின் பிரகாரம்,மன்னார் மாவட்டத்தின் பாலியாறு நீர் திட்டம்(வெள்ளாங்குளம்) மற்றும் மல்லாவி நீர் வழங்கல், திட்டம் (மல்லாவி,முல்லைத்தீவு) ஆகிய திட்டங்களின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப நிகழ்வானது இன்று(15.05) காலை 9.30 மணிக்கு,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, வெள்ளாங்குளத்தில் நடைபெற்றது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர், ஜீவன் தொண்டமான்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சாள்ஸ், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ,கிராமிய பொருளாதார அமைச்சர், காதர் மஸ்தான்,உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.