தென் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று(16.05) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று (16.05) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிலும் அனைத்து சுகாதார நிலையங்களில் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே பணிப் புறக்கணிப்பிற்கான காரணம் என சுகாதார தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து மாகாண மட்டத்திலான பணிப் புறக்கணிப்பை கடந்த 09ம் திகதி முதல் மாகாணங்கள் தோறும் முன்னெடுத்து வருகின்றன. 

Social Share

Leave a Reply