துப்பாக்கி பிரயோகத்தற்கு இலக்காகிய ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் (Robert Fico) உடல் நிலை நீண்ட சத்திர சிகிச்சைக்கு பின்னர் சீராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) மீது நேற்றைய தினம்(15.06) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஸ்லோவாக்கியாவின் Handlova நகரில், அரசாங்க கூட்டமொன்று நடைபெற்ற கலாசார நிலையத்திற்கு முன்பாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஸ்லோவாக்கிய பிரதமருக்கு 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஸ்லோவாக்கிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.