பஹல கடுகன்னாவ மறுசீரமைப்பு திட்டம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகன்னாவ பிரதேசத்தை மறுசீரமைத்து உடனடியாக அங்குள்ள கடைகளையும் புனரமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று (23/11) பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக அண்மையில் பஹல கடுகன்னாவ பிரதேச வீதி மூடப்பட்டிருந்தது. அதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் 98ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

பின்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், குறித்த வீதி ஒரு வழி வாகன போக்குவரத்துக்காக மாத்திரம் திறக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அப்பகுதியை மறுசீரமைக்கவும் மற்றும் அங்குள்ள கடைகளை புனரமைக்கவும் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

பஹல கடுகன்னாவ மறுசீரமைப்பு திட்டம்

Social Share

Leave a Reply