மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ரன்களை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 386 ரன்களைப் பெற்றது. நேற்றைய (23/11) ஆட்டத்தின் போது மே.தீவுகள் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர், ஹக்கீம் கோர்ன்வெல் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் கெய்ல் மேயர்ஸ் 45 ரன்களை அதிகமாக பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் பிரவின் ஜயவிக்ரம 4 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும் லசித் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இன்றைய தினம் (25/11) நான்காம் நாளின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.
