ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தற்போதுள்ள சட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை தயாரித்து, இலங்கை ஊடக கொள்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூக மற்றும் கலாசார அடையாளங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, தொழில்முறை திறன்கள், பயன்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றுடன் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஊடகவியலாளர்கள் மற்றும் வெகுஜன ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை திருத்துவதற்கான தேவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.