உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14/06) மன்னாரில்,காலை 8.30 4முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.
மன்னார் தேசிய இளைஞர் படையணியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பங்கேற்புடன் மன்னார் ,தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமிற்கு மன்னார் மெசிடோ நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில்,மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள்,தேசிய இளைஞர் படையணி அதிகாரிகள்,மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டதோடு, பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தனர்.
ரோகினி நிஷாந்தன்