உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு 08 வயது சிறுமி பலி

மன்னாரில் தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 08 வயது பேத்தி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் நேற்றிரவு (13.06) இடம்பெற்றுள்ளது.

விவசாயி ஒருவர் தனது  வயலில் உழுதுக் கொண்டிருந்த வேளையில்,
அருகிலிருந்த அவரது பேத்தி திடீரென கீழே விழுந்து உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply