தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமாக 400 தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் 159 இடங்களை கைப்பற்றியது.
கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 40% வாக்குகளை பெற்று பெரும்பான்மையை இழந்தது.
பிரதான எதிர்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதன்படி சிரில் ரமபோசா தென் ஆப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.