20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருமண வைபவங்கள், சினிமா திரையரங்குகள், உணவகங்கள், உணவு விடுதிகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை வழமையான முறையில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இதுபோன்ற நிகழ்வுகளை வழக்கம் போல் நடத்த அனுமதிக்கும் முன்னர், முழு தடுப்பூசி மற்றும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (26/11) ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கொவிட் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.