நீதியமைச்சர் விஜயதாச ராபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதியமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி எவ்வித அறிவிப்பினையும் விடுக்கவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.