இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது சுமார் 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெப்பமான காலநிலை மற்றும் ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களுள் சுமார் 323 பேர் எகிப்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் ஒருவர் மாத்திரம் நெரிசலின் போது ஏற்பட்ட காயங்களின் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுமார் 60 ஜோர்டானியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 577ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.