சூப்பர் 8: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பாபர்டோஸில் இன்று(20.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களையும், ஹட்ரிக் பாண்டியா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் பாரூக்கி, ரஹித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

182 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்மதுல்லா ஓமார்சாய் 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில்  இந்திய அணி 47 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply