ஆசிரியர் ,அதிபர்களின் தொழிற்சங்கங்க போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, வணக்கத்துக்குரிய யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (26.06) காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Social Share

Leave a Reply