2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (26/11) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்கள் இன்று முதல் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
