மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு  

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.

மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடந்த 6ம் திகதி கடமையைப் பொறுப்பேற்றுள்ள ஜெகத் நிசாந்த, அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரணை திராய்மடு புதிய மாவட்ட செயலகத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.

இதன்போது மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிறுவாக நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க தான் தயாராக உள்ளதாகவும் மேலும் தங்களின் அரச நிர்வாக செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தும் கலந்து கொண்டார். 

Social Share

Leave a Reply