கொவிட் 19 டெல்டா திரிபை விட அதிக வீரியம் மிக்க புதிய திரிபொன்று ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கைக்கும் மிகவும் பாராதூரமான செய்தியொன்றென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்புதிய திரிபானது B.1.1.529 வகை எனக் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை கண்டறியப்பட்ட திரிபுகளிலே இது மிகவும் ஆபத்தானது என்பதுடன் அதிவேகமாக பரவக்கூடியதென்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இத்திரிபானது ஆபிரிக்காவில் இதுவரை 59 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதுடன், தென் ஆபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் பொட்ஸ்வானா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.