பொலன்னறுவை – வெலிகந்தை பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் படுகாயமடைந்த 19 வயது திருமணமான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (25/11) உயிரிழந்துள்ளார்.
வெலிகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த அயேஷா குமுதினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் போது, படுகாயங்களுக்குள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை புதிதாக வாங்கிய சமையல் எரிவாயு சிலிண்டரே வெடித்துள்ளதாகவும், அதுதொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.