நாட்டை அழித்த ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது ஜே.வி.பியே – சஜித்

ஜனாதிபதி முழு நாட்டிக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (13.07) நடைபெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புண்ணியாத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஒருவர்,
தேர்தலுக்கு பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து
கொள்வதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்.

இவ்வாறான ஒருவரை நான் எனது வாழ்க்கையில் பார்த்தில்லை.
போட வேண்டிய ஒவ்வொரு முடிச்சிக்களையும் போடுகிறார். சிறப்புரிமைகளை வைத்து பயனடைய நினைக்கிறார்.

சலுகைகள், வரப்பிரசதாசங்களை வழங்கி கட்சித் தலைவர்களை வளைத்துப் போடும் வேலையிலும் இறங்கியிருக்கிறார்.
கட்சித் தலைவர்களிடம் பிச்சையெடுத்து பிழைக்கும் நடவடிக்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு தமது
கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் வெட்கமற்ற, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் கலாசாரத்துக்கும்,
அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவர்களையும் நிறுத்துகின்ற, இந்த பேராசை அரசியலையும் முடிவுக்குக்
கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அரசாங்க தரப்பினரும் தேர்தலைக் கண்டு அஞ்சமடைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி பூச்சியத்துக்கு வீழ்ந்ததுடன்,
புண்ணியத்தால் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும்
அதனை ஏற்றுக் கொள்வதற்குக் கூட பல மாதங்கள் பிடித்தன.

மூலோபாய ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பதிலாக
அவர்கள் தங்கள் இருப்பை பாதுகாக்கும் விதமாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டு வந்துள்ளனர்.
இத்தகைய சுயநல போக்குகளை விடுத்து, மக்களின் யுகத்தை உருவாக்கி,
சாரதாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கமொன்றே தற்போது நாட்டுக்கு
அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொய், மோசடி, நட்புவட்டார அரசியலை தொடராமல், கிராமத்தையும், நகரத்தையும்,
நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கும், பொது மக்களை பலப்படுத்துவதற்கும் மக்கள்
ஆணையை எனக்குப் பெற்றுத்தாருங்கள்.

ஜனாதிபதி அவர்கள் தேர்தலுக்கு அச்சப்பட்டால்
கொழும்பு 7 இல் அவரது மாளிகைக்குச் சென்று,
சுடு தண்ணியில் நன்றாக குழித்துக் கொண்டு netflix இல் திரைப்படமொன்றை பார்த்துக் கொண்டிருக்க முடியும்.
இல்லாவிட்டால் எம்முடன் தேர்தலுக்கு வாருங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு எந்தவொரு தேர்தலுக்கும் எந்தவொரு
சவாலுக்கும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சதிகள் ஊடாக பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தமது
அடியாட்களைப் பயன்படுத்தி தமது பதவிகளின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் போது, மறுபுறம் புதிய பாணியில் நகைச்சுவைகளை வழங்கும்
ஒரு குற்றவாளி இருந்து வருகிறார்.
இந்த குற்றவாளி முகமூடி அணிந்து வந்து சமூகத்தில் விசித்திரக் கதைகளை தெரிவித்து வருகிறார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டமோ, பொருளாதாரக் கொள்கையோ, பொருளாதாரக் குழுமோ இல்லாத இவர்கள்,
உலக செல்வந்தர்களுக்கு சேறுபூசும் விதமாக பேசி, முதலீட்டாளர்களைப் பயமுறுத்தி, கப்பம் கேட்டு வருகின்றனர்.
ஆட்சியில் பங்காளர்கள் இல்லாது போல் பேசினாலும் விவசாயம், கலாசாரம், கடற்றொழில் போன்ற பல அமைச்சுக்களை குறித்த
தரப்பினர் வகித்துள்ளனர். இவர்கள் நாட்டை அழித்த பயங்கரவாதிகள். 71, 88, மற்றும் 89 களில் இந்த நாட்டை அழித்து, பாடசாலைகளை
தீயிட்டு எரித்து நாட்டையே பீதியால் ஆண்டனர்.

இவர்களின் புதிய திட்டம் கிராமத்திற்கு நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவதாகும். 88 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில்
நீதித்துறை அதிகாரங்களை கிராமத்து மக்களுக்கு வழங்கப்பட்டதால் பல உயிர்கள் பலியாகின.
இந்த கொலைகார பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வீடு வீடாகச் சென்று அடிமட்ட பிரச்சார நடவடிக்களை முன்னெடுத்தது இத்தரப்பினரே.
ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு டீல் போட்டு வீடு வீடாகச் சென்று சுவரொட்டிகளை ஒட்டினர்.
இவர்களைப் போன்று திருடர்களுடன் எனக்கு எந்த டீலும் இல்லை.

மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தைக் இந்த மக்கள்
விடுதலை முன்னனணியினரே முன்னெடுத்தனர். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள்
விடுதலை முன்னனணியினர் செயற்பட்டாலும், அந்த திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக் கொள்ள தான் ஒருபோதும்
விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் , பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல,
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ் மற்றும்
மேல் மாகாண சபை உறுப்பினர் அனில் குமார விஜேசிங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Social Share

Leave a Reply