டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சி: சஜித்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும்,  ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று(14.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், கட்சி வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் நடைபெற்றவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை மீளாய்வு செய்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply