களுபோவில பிரதேசத்தில் இன்று (28/11) காலை கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருக்கும் பொலிஸார், எனினும் இதற்கான காரணம் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.