மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி பிரதேசங்கலிருந்து சுமார் 40 லீற்றர் கசிப்புடன் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர.
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீத மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.