‘ஒமிக்ரொன்’ தொற்றுடன் இருவர் அடையாள

அவுஸ்திரேலியா – சிட்னிக்கு வருகை வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கொரோனா திரிபு தொற்றியிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து, ஒமிக்ரொன் (B1.1.529)என்றழைக்கப்படும் புதிய கொரோனா திரிபு அவுஸ்திரேலியாவுக்குள்ளும் பரவியிருக்கலாமென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்காவில் இருந்து நேற்று (27/11) சிட்னிக்கு வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கே இவ்வாறு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் இருவரும் சுகாதார விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருவரும் இரு தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடன் வருகை தந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மீதமுள்ள 12 பயணிகள் சிறப்பு சுகாதார விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

விமானத்தில் இருந்த சுமார் 260 பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகக் கருதப்பட்டே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுசுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்க, தென்னாப்பிரிக்கா, லெசோதோ, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, ஈஸ்வதினி, மலாவி மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

‘ஒமிக்ரொன்' தொற்றுடன் இருவர் அடையாள

Social Share

Leave a Reply