பரீட்சைக்கான கால அட்டவணையை புதுப்பிக்கத் திட்டம்   

பரீட்சைக்கான கால அட்டவணையை புதுப்பிக்கத் திட்டம் 2025ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை(O/L) அடுத்த வருடம் முதல் இரண்டு மாதங்களுக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

அதன்படி, பரீட்சைகளுக்கான கால அட்டவணையை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று(24.07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.  

அண்மையில் நிறைவடைந்த க.பொ.த சா/த பரீட்சைக்கு பின்னர், உடனடியாக உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply