ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை எனவும், தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கையில் இருப்பதாக சிலர் கூறுகின்ற கருத்துக்கள் எதுவும் செல்லுபடியாகாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.