இலங்கை அணியை கட்டுப்படுத்திய இந்தியா

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி சிறப்பாக பந்துவீசியுள்ளது. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் மூலமா பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற முடியாமல் போயுள்ளது. பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களது உதவியோடு போராடக்கூடிய ஓட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது. குறிப்பாக டுனித் வெல்லாளகே தனித்து நின்று போராடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திக் கொடுத்தார். இறுதியில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இது அவரின் முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி அரைச்சதமாகும். இவருக்கு இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம் வழங்க வேண்டும் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

ஆரம்பம் முதலே ஒரு பக்க விக்கெட்கள் வீழந்தன. ஆரம்பத்தில் பத்தும் நிஸ்ஸங்க அரைச்தத்தை பூர்த்தி செய்து ஒரு பக்க விக்கெட்டை பாதுகாத்தார். அவர் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடந்து டுனித் காப்பாற்றி வந்தார். ஆனால் அணிக்குள் எடுப்பதும் வெளியியேற்றுவதுமாக உரிய வாய்ப்பை கொடுக்காமல் விடுவது இலங்கை அணிக்கு பாதிப்பே. இந்த இருவரது ஓட்டங்களே அணியை காப்பாற்றியது. ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 01 ஓட்டத்துடனும், குஷல் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம 08 ஓட்டங்களுடனும், சரித் அசலங்க 14 ஓட்டங்களையும் பெற்றனர். அகில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் டுனித் மற்றும் அகில தனஞ்ஜய இருவரும் இணைந்து 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பிரகாசித்துளள்னர். இந்தியா அணியின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 02 விக்கெட்களையும், வொசிங்டன் சுந்தர் 02 விக்கெட்களையும், மொகாமட் சிராஜ், ஆர்ஷீப் சிங், சிவம் டூபே, குல்தீப் யாதவ், ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றது. இந்த இலக்கை இந்தியா அணி இலகுவாக பெருமென்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இறுக்கமாக பந்துவீசினால் இந்தியா அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

Social Share

Leave a Reply